உங்கள் வைஃபை பாஸ்வேர்டு மறந்து போய்விட்டதா? உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் இதை விரைவாகப் பார்ப்பது எப்படி?
பெரும்பாலான நவீன ஆண்ட்ராய்டு சாதனங்கள், அது டேப்லெட்டுகளாக இருந்தாலும் சரி, ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும் சரி, உங்கள் வைஃபை பாஸ்வேர்டை விரைவாகப் பகிரவும் பார்க்கவும் உதவும் ஒரு ஆப்ஷனைக் கொண்டுள்ளன.
அதைக் கண்டுபிடிக்க, உங்கள் ஆண்டிராய்டு சாதனத்தில் செட்டிங்ஸ் பயன்பாட்டைத் திறந்து அதில் வைஃபை பகுதிக்குச் செல்லவும். உங்களிடம் சாம்சங் சாதனம் இருந்தால், இந்த ஆப்ஷன் "இணைப்புகள்" என்பதன் கீழ் அமைந்துள்ளது.
இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபையின் பெயருக்கு அடுத்துள்ள ஐகானை கையால் அழுத்தவும். அதன் பின்னர் 'பாஸ்வேர்ட்' நிரப்பு இடத்திற்கு அருகிலுள்ள கண் ஐகானைத் தட்டவும். இப்போது நீங்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டு தெரியும்.
ஒருவேளை பாஸ்வேர்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், QR குறியீடு ஐகானுடன் கூடிய 'ஷேர்' பட்டன் இருக்கும். அதைத் தொட்டால் கீழே உள்ள வைஃபை கடவுச்சொல்லைக் காண்பிக்கும்.
ஐபோன்களில் வைஃபை பாஸ்வேர்டை எப்படிப் பார்ப்பது?
உங்கள் ஐபோனில் வைஃபை பாஸ்வேர்டை பார்க்க, நீங்கள் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடியைப் பயன்படுத்த வேண்டும்.
நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபை பாஸ்வேர்டை பார்ப்பது ஐபோனில் மிகவும் எளிதானது. இதைச் செய்ய, செட்டிங்ஸ் செயலியைத் திறந்து வைஃபை ஆப்ஷனைத் தட்டவும். இப்போது, நீங்கள் இணைக்கப்பட்டுள்ள வைஃபையைக் கண்டுபிடித்து, வலதுபுறத்தில் உள்ள 'i' பட்டனைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் ஐபோன் திரையில், 'பாஸ்வேர்ட்' நிரப்பும் இடத்தைத் தட்டவும். உங்கள் ஐபோன் பாஸ்வேர்டை வெளிப்படுத்த உங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைக் கேட்கும். இதைக் கொடுத்தவுடன் நீங்க தேடிய பாஸ்வேர்டு உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.