உணவில் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்லாது நெய்யை நமது சரும ஆரோக்கியத்திலும் பயன்படுத்தலாம். குறிப்பாக நெய்யில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. குறிப்பாக இதில் உள்ள பண்புகள் நமது சருமத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி வறட்சி ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. சருமத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றை சரி செய்வதற்கு இந்த க்ரீம் பயன்படுகிறது. இந்த கிரீமை மிக எளிமையாக செய்துவிடலாம்.
நெய் மற்றும் தேன் சேர்த்த க்ரீம் ரெசிபி
நெய்- 1 டீஸ்பூன்
தேன்- 1 டீஸ்பூன்
செய்முறை
நெய்யை மிதமான தீயில் உருக்கி எடுத்துக் கொள்ளவும். இந்த நெய்யுடன் தேனை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் சருமத்தில் தடவி நைட் க்ரீம் ஆக பயன்படுத்தலாம். நெய் மற்றும் தேன் இரண்டையும் நன்கு கலக்கும்போது அது க்ரீம் வடிவில் உங்களுக்கு கிடைக்கும். தூங்க செல்வதற்கு முன் இதை உங்கள் முகத்தில் தடவி விட்டு தூங்குங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்கள் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி பளபளப்பாக மாறும்.