இலங்கையில் புதிய சமூக வலைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியில் அரசாங்கம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுகா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் இந்த சமூக வலைத்தள செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தனுகா திஸாநாயக்க கூறியுள்ளார்.
அதற்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இதன் மூலம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.