தேவையான பொருள்கள்
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 200 கிராம் (தேவைக்கு)
ரோஸ் எசன்ஸ் - 10 டிராப்
பன்னீர் - 4 டிராப்
சப்ஜா விதை - 10 கிராம்
பாதாம் - 10
செய்முறை
பாலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆற வைக்க வேண்டும்.
பாதாமை வெந்நீரில் போட்டு தோலெடுத்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
சப்ஜா விதையை இரவே ஊற வைக்க வேண்டும். அது காலையில் முத்து முத்தாக ஜவ்வரிசி ஊறியது போல் இருக்கும்.
ஆறிய பாலில் ரோஸ் எசன்ஸ், சப்ஜா விதை, நறுக்கி வைத்துள்ள பாதாம், சர்க்கரை, பன்னீர் அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
இப்போது கலந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து குடிக்கவேண்டும்.
இஸ்லாமிய இல்ல விஷேசம் மற்றும், நோன்பு காலங்களில், பெருநாள் தொழுகை முடிந்ததும் ஒரு குடம் நிறைய கரைத்து எல்லோருக்கும் கொடுப்போம்.
இதில் சப்ஜாவிதை சேருவதால் வயிற்று புண்ணை ஆற்றும். கடுமையான வெயில் காலத்திலும் குடிக்கலாம்.