ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் மீன ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விரயத்தில் இருந்த சனி இந்த மாதம் முதல் ஜென்மத்தில் பயணிக்க போகிறார். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கி அதில் நல்ல மாற்றங்கள் நிகழப் போகிறது. உங்களின் ராசியில் 5 கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருந்து உத்யோகத்தில் நல்ல மாற்றத்தை கொடுக்க போகிறார்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சனி ஜென்மத்துக்கு வந்தாலும் உங்களுக்கு அவர் நன்மை புரிய போகிறார். சுக்கிரனால் வாழ்க்கை துணை, உடன் பணியாற்றுவோரின் ஆதரவு உண்டு. பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். ஜவுளி, ஐடி துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர், வெளிநாடு வேலை வாய்ப்புகள் கைக்கூடும்.
தடைகளை தவிடு பொடியாக்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இப்போது வெற்றியாக மாறப் போகிறது. உங்களின் உற்ற நண்பருடன் ஏற்பட்ட பிரிவு சரியாகி மீண்டும் இணைய போகிறீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். கல்வியிலும் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டில் கல்வி, தொழிலில் இறங்குவீர்கள்.
ராகு பகவனால் சிந்தனைகளில் மேம்பாடு இருக்கும். ராகு - சனி சேர்க்கையால் உத்யோகத்தில் எதிர்பாராதளவுக்கு மிகப்பெரிய மாற்றம், முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக அரசுப்பணிக்கு முயற்சி செய்வோருக்கு இந்த காலத்தில் அரசுப்பணி கிடைப்பதற்கான வாய்ப்பும் உண்டு. வருமானம் திருப்திகரமாக இருக்கும். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை வாங்கிக் குவிப்பீர்கள்.
பயணங்களில் கவனம் தேவை. பணம், நகை, உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். பெண்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழி உறவில் கவனமாக இருக்க வேண்டும். தந்தை - மகன் உறவில் பிரச்னை வரும். தொழிலில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம் - மாரியம்மன் வழிபாட்டால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் வழிபாடு காரியங்களில் வெற்றி கிடைக்கும்.