தேவையான பொருட்கள்
1 கிலோ கடலைமாவு
3 கிலோ சர்க்கரை
3/4 லிட்டர் தண்ணீர்
1_1/2 லிட்டர் சன்ப்ளவர் ஆயில்
1 லிட்டர் பசு நெய்
4 டேபிள் ஸ்பூன் ஏலத்தூள்
50 கிராம் குளுக்கோஸ் பவுடர்
பாதாம் பிஸ்தா நீளவாக்கில் நறுக்கியது
சமையல் குறிப்புகள்
சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை நன்கு கொதிக்க விடவும் கடலைமாவை நன்றாக ஒரு முறை ஜலித்து கொள்ளவும் பின் அதனுடன் 3/4 லிட்டர் அளவு சன்ப்ளவர் ஆயில் சேர்த்து கட்டியில்லாமல் ஸ்மூத்தாக கரைத்து ரெடியான பாகுடன் சேர்த்து நன்கு கிளறவும்
கடலைமாவு சர்க்கரை கலவை உடன் சேர்ந்து நன்கு வெந்து நிறம் மாறியதும் மீதமுள்ள ஆயிலை சேர்த்து நன்கு கிளறவும் கை விடாமல் நன்கு கிளறவும் பின் மஞ்சள் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்
ஒரளவு கெட்டியாக ஆரம்பித்ததும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
கை விடாமல் தொடர்ந்து கிளற வேண்டும் முதலில் அதிக தீயில் வைத்து நன்றாக கிளறவும் பின் கலவை திக்கானதும் மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும்
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது குளுக்கோஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய்யை ஊற்றி நன்கு கிளறவும்
கைகளில் தொட்டு உருட்டினால் ஒட்டாமல் உருட்ட வருவது பதம் அதுவரை நன்கு கிளறவும் கிளறும் போது சைட் எல்லாம் அவ்வப்போது விசிறியால் நன்றாக வழித்து விட்டு பிறகு கிளறவும்
பின் பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடம் வரை அந்த சூட்டிலே நன்கு கிளறவும் பின் நெய் தடவி பொடியாக நீளவாக்கில் நறுக்கிய பாதாம் பிஸ்தா பருப்பை தூவி ரெடியா உள்ள ட்ரேயில் கலவையை போடவும்
பின் ட்ரேயே சமப்படுத்தி ஐந்தில் இருந்து ஆறு மணி நேரம் வரை செட் ஆக விடவும்
பின் கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்
எத்தனை கலரான மைசூர் பாகு வாயில் போட்டதும் கரையும் தன்மை கொண்டது
இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த மைசூர் பாகு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து உங்க மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.