எளிமையான முறையில் தாய்மையடைய ஆரோக்கியமான உணவு பழக்கமும் தாக்கம் செலுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
திருமணமான தம்பதிகள் சிலர் தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்களினாலும், தவறான வாழ்க்கை முறையினாலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.
அதற்கு முதலில் சரியான உணவு பழக்கம் அவசியம் என மருத்துவர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அப்படியாயின், தாய்மையடைவதற்கு தேவையான உணவுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கருவை வளர வைக்கும் உணவுகள்
1. புளித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடும் ஒருவருக்கு குடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஏனெனின் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சமநிலை நன்றாக இருக்கும். இப்படியான நேரங்களில் கரு நன்றாக பதிந்து வளர ஆரம்பிக்கும். உதாரணமாக சுண்டைக்காய் வற்றல், மணத்தாக்காளி வற்றல், மோர், பழைய சாதம் மற்றும் நீராகாரம் உள்ளிட்ட உணவுகளை சாப்பிடலாம்.
2. கருவுறுவதற்காக முயற்சிக்கும் பெண்கள், மாதவிடாயின் முதல் 10 நாட்கள் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடலாம். இதிலிருந்து கிடைக்கும் ஃபோலிக் ஆசிட் கருமுட்டை வளர்ச்சி மற்றும் எம்ப்ரியோவின் வளர்ச்சிக்கான சிங்க், பயோட்டின், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை கொடுக்கிறது. DNA நல்ல முறையில் உற்பத்தியாகும். வாரத்தில் இருமுறை எடுத்துக்கொள்வது நல்லது