அக்குள் கருமையால் கஷ்டப்படுகிறீர்களா?
அக்குள் கருமையை இயற்கையான வழிகளாக கற்றாழையை பயன்படுத்தி 5 வழிகளில் பக்க விளைவுகள் இல்லாமல் மறையச்செய்யலாம்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ள கற்றாழையைப் பயன்படுத்தலாம். இதில் சருமத்திற்கு ஈரப்பதமூட்டும் விளைவை ஏற்படுத்தும்.
படிப்படியாக இதனை அக்குள் பகுதியில் தேய்த்து வர கருமை மறையும்.
கற்றாழை + எலுமிச்சை சாறு
அக்குள் கருமையை நீக்குவதற்கு இது மிகவும் பயனுள்ளதாகும். இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் எலுமிச்சை சாறு சர்க்கரை சிறிது சேர்த்து நன்றாக கலந்து அக்குள்களில் தடவி மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவவும் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் சரும நிறம் மாற்றத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கற்றாழை சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது.
கற்றாழை + வைட்டமின் ஈ காப்ஸ்யூல்
2 டீஸ்பூன் கற்றாழ ஜெல்லை எடுத்து அதனுடன் வைட்டமின் ஈ கேப்சூல் எண்ணெய் சேர்த்து கலந்து இதை அக்குளில் 20 நிமிடங்கள் தடவி ஊறிய பின் தண்ணீரில் கழுவவும். தினமும் இக்கலவையை இரவில் தடவி வர அக்குள் கருமையை நீக்குவதில் இது மிகவும் திறம்பட வேலை செயல்படுகிறது.
கற்றாழை + தயிர்.
2 டீஸ்பூன்கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்களில் தடவி வர இதனால் அக்குள் கருமை மிக விரைவாக மறைவதை காணலாம். இதனை தினமும் சில நாட்களுக்கு பின்பற்றலாம். தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தின் கருமையான நிறம் மாற்றத்தை எளிதில் நீக்குகிறது.
கற்றாழை + தக்காளிசாறு
தக்காளியை கூழாக்கி கற்றாழை ஜெல்லுடன் கலந்து அரை மணி நேரம் விட்டு விட்டு தண்ணீரில் கழுவவும். அக்குள் கருமையை மறைப்பதில் தக்காளிசாறு முக்கிய பங்கு வைக்கிறது. தக்காளியில் சிட்ரிக் அமிலம், லாக்டிக் உள்ளது. இது சருமத்தின் நிறத்தை மாற்றுகிறது. இதனை தினமும் தடவி வந்தால் அக்குள்களுக்கு கீழே உள்ள கருமை படிப்படியாக மறைந்துவிடும்.
கற்றாழை + மஞ்சள்தூள்
மஞ்சளில் அதிக அளவு ஆக்சிஜனேட்டர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தின் பொலிவை அதிகரிக்கிறது. 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் கடலைமாவு, மஞ்சள்தூள் சேர்த்து அக்குளில் தடவி அரைமணி நேரம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவி வர கருமை நிறம் மாறி சருமம் வெண்மை நிறத்துடன் காணப்படும்.
இதில் ஏதாவது ஒன்றை தவறாமல் செய்து வந்தால் நாளடையில் கருமை மறையும்.