கடந்தாண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். 10 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்றவர்கள், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதால், சுமார் 9 மாதங்களாக பூமி திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு எலான் மஸ்க்கிற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து எலான் மஸ்க்கிற்கு சொந்தமான டிரான் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் சீறிப்பாயத் திட்டமிடப்பட்டது.
ஆனால், கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சுனிதாவை பூமிக்கு கொண்டு வரும் க்ரூ-10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று அதிகாலை 4.30 மணி அளவில், டிரான் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. வரும் 19 ஆம் தேதி வாக்கில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.