மீன ராசியில் சுக்கிரன் உதயமாவதால் மார்ச் 28 முதல் என்னவெல்லாம் நடக்கப் போகுது தெரியுமா?
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வளர்ச்சியில் தாமதத்தை சந்திக்கலாம். பல தடைகளையும் சந்திக்க நேரிடும். வேலை தொடர்பாக நிறைய சவால்களை சந்திப்பீர்கள். எந்த வேலையையும் திட்டமிட்டு செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் மிதமான லாபத்தை மட்டுமே பெற முடியும். வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். பயணம் செய்யும் போது நீங்கள் பணத்தை இழக்க நேரிடும். எனவே கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.