- பிளாக் உருவாக்க ஜிமெயில் அக்கவுண்ட் தேவை. ஜிமெயில் அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
- www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
உங்களுக்கு ஜிமெயில் கணக்கு மூலம் உள்நுழையுங்கள்.
- பிறகு வரும் பக்கத்தில் Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுத்து Contiune to Blogger என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- CREATE NEW BLOG என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்
- Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை கொடுங்கள்.
- Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.
- Theme என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.
பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.